இலக்கிய விமர்சனம் குறித்த பார்வைகள்
Perspectives on Literary Critique in Tamil Literature

Conversations  |  General  |  Cross-genre  |  தமிழ்  |  1.5 hrs

18 Nov, Sat, 4.30pm to 6.00pm
Festival Pass
favourite favourite Add To Favourites
Event has ended

About

தமிழ் இலக்கிய வட்டங்களில் இலக்கிய விமர்சனங்கள் எவ்வாறு நடைபெறுகின்றன? இலக்கிய விமர்சனங்களைக் குறித்து நாம் அறிந்த, அறியாத விதிகள் யாவை? இலக்கிய படைப்புகளை விமர்சிக்கும் கலை, ஆக்கமற்ற மற்றும் ஆக்கப்பூர்வமான விமர்சனங்களுக்கிடையே உள்ள மெல்லிய வேறுபாடுகள், உலகத் தமிழ் வாசகர் மற்றும் எழுத்தாளர் வட்டங்களில் இலக்கிய விமர்சனம் குறித்த பார்வைகள் என பலதரப்பட்ட தலைப்புகளை ஒட்டிய இந்த வெளிப்படையான உரையாடலில் கலந்துகொள்ள வாருங்கள்.

தமிழில் வழங்கப்படும் இந்நிகழ்ச்சி, ஆசியப் படைப்பிலக்கிய எழுத்துத் திட்டத்தின் ஆதரவில் நடைபெறுகிறது. (ஆசியப் படைப்பிலக்கியத் திட்டமானது, சிங்கப்பூர் தேசியக் கலை மன்றம் மற்றும் நன்யாங் தொழில்நுட்பப் பல்கலைக்கழகத்தில் ஸ்கூல் ஆஃப் ஹ்யூமனிட்டியின் நிதியுதவியைக் கொண்டு செயல்படும் ஒரு கூட்டு முயற்சி ஆகும்.)

What are the spoken and unspoken rules of offering literary critique in Tamil literary spheres? Join these writers in this honest and open discussion on the art of reviewing literary works, the thin line between constructive and unconstructive feedback, and the varied culture of literary critique in Tamil reading and writing communities around the world.

This panel will be presented in Tamil, and is supported by the Asia Creative Writing Programme, a joint initiative of the National Arts Council and the School of Humanities at Nanyang Technological University.

Speakers

அழகுநிலா Azhagunila

அழகுநிலா ஆறஞ்சு, சிறுகாட்டுச் சுனை, சங் கன்ச்சில், மொழிவழிக் கனவு, அப்பன் ஆகிய ஐந்து நூல்களை எழுதியுள்ளார். மொழிவழிக் கனவு 2022 சிங்கப்பூர் இலக்கியப் பரிசை வென்றது. சிறுகாட்டுச் சுனை 2020 சிங்கப்பூர் இலக்கியப் பரிசுக்குத் தகுதிச் சுற்றில் தேர்வானது. இவர் குழந்தைகளுக்காக கொண்டாம்மா கெண்டாமா, மெலிஸாவும் மெலயனும், மெலிஸாவும் ஜப்பானிய மூதாட்டியும், பா அங் பாவ் ஆகிய நான்கு புத்தகங்களை எழுதியுள்ளார். சிங்கப்பூர் புத்தக மன்றத்தின் ‘Beyond Words 2015’ போட்டியில் கொண்டாம்மா கெண்டாமா நூல் வெற்றி பெற்றது. தேசிய கலைகள் மன்றம் – சங்கம் இல்லம் உறைவிடக் கல்வித் திட்டம் 2022-23க்கு உடனுறை எழுத்தாளராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

Azhagunila is the author of Oranju, Sirukattu Chunai, Sang Kancil, Appan and Mozhivazhi Kanavu. The latter won the Singapore Literature Prize 2022. Sirukattu Chunai was shortlisted for the SLP 2020. She has also published four picture books for young readers: Kondama Kendama, Melissavum Merlionum, Melissavum Japaniya Moothatiyum and Pa Ang Bao. The former won the Beyond Words competition by SBC in 2015. She was selected as a writer-in-residence for the NAC - Sangam House Residency 2022-23.

 
 

Moderator

Rama Suresh was born in Ambalaappattu village in Thanjavur district in India. She is a writer as well as a speaker. Her debut novel Ambaram received Singapore Literature Award 2022. Her first short story collection Woodlands Street 81 received the K.S.Sivakumar award in 2018. Her short stories received first and second prizes in the Golden Point Award in 2017 and 2015 respectively.

 
close