கருப்பும் வெள்ளையும் கலந்த கதை மாந்தர்கள்
Shades of Grey in Tamil Fictional Characters

Conversations  |  General  |  Fiction  |  தமிழ்  |  1.5 hrs

25 Nov, Sat, 5.00pm to 6.30pm
Festival Pass
favourite favourite Add To Favourites
Event has ended

About

புனைகதைகளில் ‘கதாநாயகன்' மற்றும் ‘வில்லன்' கதாப்பாத்திரங்களை முற்றிலும் நல்லவர் அல்லது தீயவர்களாக சித்தரிக்கும் காலம் மலையேறிவிட்டது.

இக்கலந்துரையாடலில் பங்குபெறும் எழுத்தாளர்கள், வினோதமான, பல குண பரிமாணங்கள் கொண்ட, வழக்கத்திற்கு மாறான கதாபாத்திரங்களைக் கொண்ட புதினங்கள் குறித்து நம்முடன் கலந்துரையாடவிருக்கின்றனர். மேலும் அத்தகையக் கதாபாத்திரங்களை தங்கள் படைப்புகளில் உருவாக்க முயலும் தங்கள் அனுபவங்களையும் பகிரவிருக்கின்றனர்.

இந்த நிகழ்ச்சி தமிழில் நடைபெறும்.

Long gone are the days of "heroes" and "villains" in fictional narratives—the homogenously "good" and "bad" who used to dominate our storylines. In this conversation, hear writers share their liking for creating and discovering complex, multi-dimensional, and even dysfunctional characters through their works. Who said you can only have one face?

This programme is in Tamil.

Speakers

 
வித்யா அருண் Vidhya Arun

பதினாறு ஆண்டுகளாக சிங்கப்பூரில் வசித்துவரும் திருமதி.வித்யா அருண், மன்னார்குடியைச் சேர்ந்தவர். தமிழ்நாடு அரசின் கல்வி ஊக்கத்தொகையைக் கொண்டு, இந்தியாவின் ராஜஸ்தான் மாநிலம், பிலானியில்(BITS, Pilani) மேலாண்மை(Masters in Management Studies) முதுகலை பட்டப்படிப்பை முடித்தவர். விநியோகச் சங்கிலித் துறையில் பன்னாட்டு நிறுவனங்களில் வேலைபார்த்து வருகிறார். இவரது முதல் புத்தகம், எளிதாய்க்கற்கலாம் திருமுறை (அகநாழிகை பதிப்பக வெளியீடு 2021) வெளிவந்து கவனத்தைப்பெற்றது. இரண்டாவது புத்தகம், காலாழ் களரில் உலகு (டிசம்பர் 2022) என்ற சிறுகதைத்தொகுப்பு வெளியாகியுள்ளது.

Vidhya Arun is a resident of Singapore for 16 years and is from Mannargudi, India. She is a MMS graduate from BITS, Pilani and a successful supply chain professional. She has been writing short stories and essays based on travel and sociological issues. Her first book, ElithaaikKarkalaam Thirumurai (2021) was published by Aganazhigai Publications. Her second book, Kalaazh Kalaril Ulagu (2022) is a short story collection.

 
கே. பாலமுருகன் K Balamurugan

கெடா மாநிலத்தில் ஆசிரியராகப் பணியாற்றி வரும் எழுத்தாளர். இதுவரை மாணவர்களுக்காக 18க்கும் மேற்பட்ட நூல்களும், இலக்கியத்தில் 16 நூல்களும் இயற்றியுள்ளார். சிறுவர்களுக்கான தொடர் நாவலை மலேசியாவில் முதலில் தமிழில் எழுதியவரும் இவரே. மர்மக் குகையும் ஓநாய் மனிதர்களும் என்கிற அச்சிறுவர் நாவல் பல்லாயிரம் மாணவர்களால் ஆர்வத்துடன் தொடர்ந்து வாசிக்கப்பட்டு வருகிறது. சிறுவர்களின் உலகில் விருப்பமான எழுத்தாளராக வலம் வந்து கொண்டிருக்கிறார். இதுவரை கலை இலக்கியத்தில் இருபதிற்கும் மேற்பட்ட விருதுகளைப் பெற்றுள்ளார்.

K Balamurugan works as a teacher in the state of Kedah. So far he has authored more than 18 books for students and 16 books on literature. In Malaysia, he is also the first person to have written a series of children's novels in Tamil. The children's novel Mystery Cave and Wolf Men is popular with students. He is also an award-winning short-film-maker featured in international film festivals, having received more than 20 awards in literature and short film categories.

Moderator

மகேஷ் ஒரு வாசகர், எழுத்தாளர் மற்றும் மொழிபெயர்ப்பாளர். தமிழிலும், ஆங்கிலத்திலும் சில சிறுகதை, கவிதை நூல்களை வெளியிட்டுள்ளார். பல்வேறு இந்திய மொழிகள், ஆங்கிலம் மற்றும் பிரஞ்சு மொழிகளில் இருந்து கவிதைகளை தமிழில் மொழிபெயர்த்து வெளியிட்டுள்ளார். பிளாக்செயின் தொழில்நுட்பம் குறித்த அறிமுக நூல் எழுதியுள்ளார். 2017 ஆம் ஆண்டில், தமிழ் கவிதைகள் பிரிவில், சிங்கப்பூர் தேசிய கலை மன்றம் வழங்கிய "தங்கமுனை சிறப்பு விருது" பெற்றார். கலை, சிங்கப்பூரில் வெளிவரும் “தி சிராங்கூன் டைம்ஸ்” என்ற தமிழ் இலக்கிய மாத இதழின் ஆசிரியர் குழுவில் ஒரு தன்னார்வல ஆசிரியராக இருந்துவருகிறார்.

Mahesh is an avid reader, writer and translator. He has published a few books in Tamil and English including short stories and poems. He translates poems into Tamil from various Indian languages, English and French. He has also authored a primer on block chain technology.

In the Tamil poetry category of the 2017 Golden Point Award, he was received a Merit Award from the National Arts Council of Singapore. He has been a voluntary editor for The Serangoon Times, a Tamil monthly focused on arts and literature.

 
close