திடுக்கிடல் கவிதைகள்: கவிதை வாசிப்பும் கலந்துரையாடலும்
Unpredictable Poetry: Readings & Conversations about Tamil Poetry

Conversations  |  General  |  Poetry  |  தமிழ்  |  1.5 hrs

19 Nov, Sun, 4.30pm to 6.00pm
Festival Pass
favourite favourite Add To Favourites
Event has ended

About

சில கவிதைகள் மட்டும் ஏன் மனதில் நீங்காமல் நிற்கின்றன? சில கவிதைகள் ஏன் நம்மைத் துணுக்குற வைக்கின்றன? புரட்சிமிக்க கவிதைகளைப் படைத்து கவிதை உலகில் புதிய சகாப்தங்களை உருவாக்கிய கவிஞர்கள் யாவர்?

இந்தக் கவிதை வாசிப்பு மற்றும் கலந்துரையாடல் நிகழ்வின் வழி, உலகில் வெவ்வேறு காலக்கட்டங்களில் வாசகர்களைக் கவர்ந்த தமிழ்க் கவிதைகளைப் பற்றித் தெரிந்துகொள்ள வாருங்கள்.

கவிமாலை சிங்கப்பூர் அமைப்புடன் இணைந்து வழங்கப்படும் இந்த நிகழ்ச்சி தமிழில் நடைபெறும். நிகழ்ச்சியின் நிறைவில் கவிமாலை அமைப்பு சிறந்த தமிழ்க் கவிதை நூல் விருதிற்கான பரிசளிப்பு விழாவை நடத்தவிருக்கிறது.

What makes some poems so thought-provoking and memorable, and others, so intriguing and evocative? Are there poets who were so groundbreaking, that they spurred a new era of writing? Through a series of readings and conversations, hear from these poets about old and contemporary Tamil poetry around the world that has surprised readers of different times.

This programme is in Tamil, and is co-presented with Kavimaalai Singapore. Kavimaalai will conclude the session with an award presentation ceremony for the Best Tamil Poetry Book Award.

Speakers

பிச்சினிக்காடு இளங்கோ Pichinikkadu Elango

சிங்கப்பூர் நிரந்தரவாசியான பிச்சினிக்காடு இளங்கோ, தமிழ்நாடு அரசு ஊழியராகவும், இந்திய அரசின் அனைத்திந்திய வானொலியிலும், சிங்கப்பூர் ஒலிபரப்புக்கழகத்திலும் பணியாற்றியவர். தமிழர் பேரவையின் திங்களிதழான சிங்கைச்சுடரிலும், புதிய நிலா இதழின் பொறுப்பாசிரியராகவும் பணியாற்றியவர்.

இப்பொழுது இவரே தொடங்கி , ஆசிரியராக இருந்து மக்கள் மனம் என்னும் திங்களிதழை நடத்துகிறார். இவர் ஒரு வேளாண்மைப்பட்டதாரி. தோட்டக்கலைத்துறையிலும் பணியாற்றியிருக்கிறார். கவிமாலையை இரண்டாயிரமாம் ஆண்டில் தொடங்கியவர். 23 நூல்களின் ஆசிரியரான இவர், கவிதை, நாடகம், சிறுகதை, கட்டுரை, கவிதைப்புதினம், காப்பியம், இசைப்பாடல்கள் எழுதியிருக்கிறார்.

Pichinikkadu Elango is an author of 23 books and is a permanent resident of Singapore.  He has worked in the State Government of Tamil Nadu as an Agricultural officer, All India Radio, Tiruchirappalli (Government of India), and the Singapore Broadcasting Corporation. He was an Editor for the Tamil monthly Singai Chudar run by Tamil Representative Council of Singapore, Editor-in-Charge for the Tamil monthly Puthiya Nila and now as Editor running his own magazine called Makkal Manam. He is an agricultural graduate and has worked as horticulturist in Singapore. He has written poems, drama, poetic drama, short stories, essays, poetic novel, epics and songs.  He is the founder of the Kavimaalai Organisation in Singapore started in 2000.

 
 
 
சங்கீதா Sangeetha
 
பெருமாள் முருகன் Perumal Murugan

தமிழ் எழுத்தாளராகிய பெருமாள் முருகனின் படைப்புகள் ஆங்கிலம் உட்பட பல மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. இந்தியாவின் மதிப்பு மிக்க எழுத்தாளர்; பெரும் வாசகப் பரப்பைக் கொண்டவர். PEN அமைப்பின் துணைத்தலைவராக உள்ளார். அரசு கலைக்கல்லூரியில் தமிழ்ப் பேராசிரியராகவும் முதல்வராகவும் பணியாற்றி ஓய்வு பெற்றவர். பன்னிரண்டு நாவல்கள், ஆறு சிறுகதைத் தொகுப்புகள், ஆறு கவிதைத் தொகுப்புகள், பல கட்டுரை நூல்கள், தொகுப்புகள், பதிப்புகள் எனப் பல நூல்களை வெளியிட்டுள்ளார். அமெரிக்காவில் வழங்கப்படும் ‘மொழிபெயர்ப்பு இலக்கியத்திற்கான தேசிய விருது’ நெடும்பட்டியலில் ‘மாதொருபாகன்’, ‘பூனாச்சி அல்லது ஒரு வெள்ளாட்டின் கதை’ ஆகிய நூல்கள் அடுத்தடுத்த ஆண்டுகளில் இடம்பெற்றன. 2023ஆம் ஆண்டுக்கான ‘பன்னாட்டுப் புக்கர் பரிசு’ நெடும்பட்டியலில் இவரது ‘பூக்குழி’ நாவல் இடம்பெற்றது.

Perumal Murugan is a professor of Tamil literature and one of India's most respected and bestselling literary writers. An author of twelve novels and six collections each of short stories and poetry, Murugan has twice been longlisted for the National Book Award for Translated Literature for One Part Woman  and The Story of a Goat. He is also a Vice President of PEN International. The translation of Perumal Murugan’s novel Pookuzhi (Pyre) was longlisted for the International Booker Prize 2023.

Moderator

கவிஞர் இன்பா, கவிதைகள் இயற்றுவதில் தனித்து விளங்குவதுடன் சிறுகதைகளும் எழுதியிருக்கிறார். சிங்கப்பூர்க் கவிமாலை அமைப்பின் தலைவராகப் பொறுப்பேற்று பல்வேறு நிகழ்ச்சிகளை முன்னெடுத்து நடத்தி வருகிறார். 2009-ஆம் ஆண்டில் சிங்கப்பூர் தேசிய கலைகள் மன்றம் நடத்திய தங்க முனை விருதுப் போட்டியில் முதல் பரிசு பெற்ற இவர், தான் எழுதிய “லயாங் லயாங் குருவிகளின் கீச்சொலிகள்” எனும் கவிதை தொகுப்பிற்கு 2022-இற்கான சிங்கப்பூர் இலக்கியப் பரிசை வென்றார்.  தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக் கழகம் வழங்கிய கரிகாற்சோழன் விருது மற்றும் தமிழ் நாடு அரசின் அயலகப் படைப்புகளுக்கான கவிதை விருது பெற்றுள்ளார்.

Writing is Inbha’s passion and pleasure. She won the Golden Point Award in 2009 and various other prizes for her poetry and short stories. She has published a total of 7 books in Tamil including poetry, and short story collections. Her short story collection மூங்கில் மனசு (Moongil Manasu) won the Karikarcholan award from Thanjavur Tamil University, மழை வாசம் (Mazhai Vasam) poetry book won the Tamil Nadu Government award for works by the diaspora. Her poetry collection, லயாங் லயாங் குருவிகளின் கீச்சொலிகள் (Layang Layang Bird Tweets) received the Singapore Literature Prize 2022. She is the head of Kavimaalai, The Society of Singapore Tamil Poets from 2019.

 
close