திருப்புமுனை: தமிழ்ப் புனைவிலக்கியங்களின் திருப்பங்களும் வளர்ச்சிகளும்
Twists & Turns in the History of Tamil Fiction

Lecture  |  Festival Highlights  |  Fiction  |  தமிழ்  |  1.5 hrs

18 Nov, Sat, 2.00pm to 3.30pm
Festival Pass
favourite favourite Add To Favourites
Event has ended

About

உலகத் தமிழ்ப் புனைவெழுத்தின் வரலாறு பல காலகட்டங்களைத் தாண்டி, புகழ்பெற்ற எழுத்தாளர்கள் மற்றும் இயக்கங்களின் தாக்கத்தினால் இன்றைய தமிழ் வாசகர்கள், எழுத்தாளர்களின் கண்ணோட்டங்களில் பல மாற்றங்களைக் கொண்டு வந்துள்ளது.

இந்த நீண்ட வரலாற்றில் திருப்புமுனைகளாய் அமைந்த நிகழ்வுகள் யாவை? அவை இக்கால தமிழ் வாசகர்களுக்கும் எழுத்தாளர்களுக்கும் வழங்கும் வாழ்வியல் அனுபவங்கள் என்னென்ன?

புகழ்பெற்ற எழுத்தாளர் பெருமாள் முருகன் வழங்கும் இவ்விரிவுரையில், உலகத் தமிழ்ப் புனைகதை எழுத்து வரலாற்றில் நடந்த எதிர்பாரா திருப்பங்களைப் பற்றி மேலும் அறியுங்கள்.

வாசகர் வட்டத்துடன் இணைந்து வழங்கப்படும் இந்த நிகழ்ச்சி, தமிழில் நடைபெறும்.

The history of world Tamil fiction, is dotted by many different periods, characterised by prominent writers and movements that brought about change in the perspectives of Tamil readers and writers. What were these turning points, and what insights do they offer to the writers and readers of today? In this lecture by critically acclaimed writer Perumal Murugan, learn about the unexpected developments in the history of international Tamil fiction writing.

This programme is in Tamil, and is co-presented with Vasagar Vattam. 

Speakers

பெருமாள் முருகன் Perumal Murugan

தமிழ் எழுத்தாளராகிய பெருமாள் முருகனின் படைப்புகள் ஆங்கிலம் உட்பட பல மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. இந்தியாவின் மதிப்பு மிக்க எழுத்தாளர்; பெரும் வாசகப் பரப்பைக் கொண்டவர். PEN அமைப்பின் துணைத்தலைவராக உள்ளார். அரசு கலைக்கல்லூரியில் தமிழ்ப் பேராசிரியராகவும் முதல்வராகவும் பணியாற்றி ஓய்வு பெற்றவர். பன்னிரண்டு நாவல்கள், ஆறு சிறுகதைத் தொகுப்புகள், ஆறு கவிதைத் தொகுப்புகள், பல கட்டுரை நூல்கள், தொகுப்புகள், பதிப்புகள் எனப் பல நூல்களை வெளியிட்டுள்ளார். அமெரிக்காவில் வழங்கப்படும் ‘மொழிபெயர்ப்பு இலக்கியத்திற்கான தேசிய விருது’ நெடும்பட்டியலில் ‘மாதொருபாகன்’, ‘பூனாச்சி அல்லது ஒரு வெள்ளாட்டின் கதை’ ஆகிய நூல்கள் அடுத்தடுத்த ஆண்டுகளில் இடம்பெற்றன. 2023ஆம் ஆண்டுக்கான ‘பன்னாட்டுப் புக்கர் பரிசு’ நெடும்பட்டியலில் இவரது ‘பூக்குழி’ நாவல் இடம்பெற்றது.

Perumal Murugan is a professor of Tamil literature and one of India's most respected and bestselling literary writers. An author of twelve novels and six collections each of short stories and poetry, Murugan has twice been longlisted for the National Book Award for Translated Literature for One Part Woman  and The Story of a Goat. He is also a Vice President of PEN International. The translation of Perumal Murugan’s novel Pookuzhi (Pyre) was longlisted for the International Booker Prize 2023.

Moderator

தமிழ்நாட்டில் நெய்வேலியில் பிறந்த சித்ரா ரமேஷ், கடந்த 30 ஆண்டுகளாக சிங்கப்பூரில் வசித்து வருகிறார். யுவபாரதி அனைத்துலகப்பள்ளியில் ஆசிரியையாகப் பணி புரிகிறார். இவர் இதுவரை இரண்டு சிறுகதைத் தொகுப்புகள், ஒரு கவிதைத் தொகுப்பு மற்றும் நான்கு புதினமல்லாத வகை நூல்கள் வெளியிட்டுள்ளார். இவரது முதல் நூலான ‘நகரத்தின் கதை’ சிங்கப்பூர் இலக்கியப் பரிசுக்காக 2014ஆம் ஆண்டு பரித்துரைக்கப்பட்டது. வாசகர் வட்டம் என்ற சிங்கப்பூர் தமிழிலக்கிய அமைப்பின் ஒருங்கிணைப்பாளராகவும் செயல்படும் சித்ரா, தான் எழுதிய ‘ஒரு துளி சந்தோஷம்’ என்ற சிறுகதை மற்றும் குறுநாவல் தொகுப்பிற்கு 2018-ஆம் ஆண்டின் சிங்கப்பூர் இலக்கியப் பரிசின் தகுதி விருதை வென்றார்.

Chitra Ramesh is a postgraduate trained teacher in Biology and Tamil, who currently works as a teacher in Yuvabharathi International School. She has written 7 books and won prizes at national level. She is the president of the Vasagar Vattam, a Tamil readers’ circle in Singapore. Chitra’s first book, Nakaraththin kathai, was shortlisted for the Singapore Literature Prize in 2014. Her short story compilation Oru Thuli Santhosham (A drop of happiness) won the Singapore Literature Prize merit award in the year 2018. 

 
close