About
This pre-recorded programme is in Tamil.
நிகழ்வைப் பற்றி
‘தி சிராங்கூன் டைம்ஸ்’, ‘அரூ’, ‘வல்லினம்’ எனும் சிங்கப்பூரிலும் மலேசியாவிலும் இயங்கி வரும் மூன்று முக்கிய தமிழ் சஞ்சிகைகள், இரண்டு நாடுகளிலும் பல்வேறு இலக்கிய வகைகள் மலர்வதற்கும் தமிழ்ச்சமூகத்தினர் தங்கள் இலக்கிய வாசிப்பிலும் எழுத்திலும் வளர்வதற்கும் தளம் அமைத்துத் தந்துள்ளன. இந்த சஞ்சிகைகள் கடந்து வந்த பாதையைப் பற்றிக் கலந்துரையாடவிருக்கும் அவற்றின் பிரதிநிதிகள், தங்கள் சிறு பிராயத்திலிருந்து விரும்பி வாசித்த சஞ்சிகைகளைப் பற்றியும் நினைவுகூரவிருக்கின்றனர்.
முன் ஒளிப்பதிவு செய்யப்பட்ட இந்த அமர்வு தமிழில் வழங்கப்படுகிறது.
Writers / Presenters
Moderator
Dr Saravanan Vivekanandan is a research scientist with Molecular Mechanisms Underlying Inflammatory Diseases (MMID), a joint research project between the National University of Singapore (NUS) and the Hebrew University of Jerusalem (HUJ). An avid reader, he contributes regularly to literary magazines like Serangoon Times, and websites such as Vishnupuram Ilakiya Vattam. He is also a literary organiser, facilitating programmes for noted Tamil writers such as Jeyamohan, Nanjil Nadan, Gnani, Su.Venugopal, and Suthradhari during their visits to Singapore.
சரவணன் விவேகானந்தன் சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழகத்தில், நோய்களின் உயிரணு, மூலக்கூறு ஆகிய இயங்குமுறை ஆராய்ச்சிகளில் இயங்கும் விஞ்ஞானி. தீவிர வாசகரும், இலக்கிய ஆர்வலருமான சரவணன், தமிழின் முன்னோடி எழுத்தாளர்களான ஜெயமோகன், நாஞ்சில் நாடன், எஸ். ராமகிருஷ்ணன், ஞாநி, சு. வேணுகோபால், சூத்ரதாரி, சீ. முத்துசாமி போன்றவர்கள் பங்கேற்ற பல இலக்கிய நிகழ்வுகளைச் சிங்கப்பூரில் ஒருங்கிணைத்திருக்கிறார்.