Home / SWF 2021 Programmes
/Switch language: TamilEnglish

மஹாகவி பாரதி: தமிழ், சீன, மலாய் மொழிகளில் நவீன கவிதை முன்னோடிகள்
(The Cult of Bharati: A Cross-Language Panel on Pioneers of Modern Tamil, Chinese, and Malay Poetry)

Conversations  |  General  |  English, தமிழ்  |  1.5 hr

12 Nov Fri, 6.30pm - 8pm
Festival Pass  - $16 (Early Bird) | $20 (Regular)
location SISTIC Live
favourite favourite Add To Favourites
Event has ended

About

Bharati (C. Subramania Bharati, 1882 - 1921), a.k.a. Bharathiyar, is considered the father of modern Tamil poetry. A century may have gone by since his passing, but the era of Bharati is far from over. This panel focuses on Bharati, the persona, and draws parallels between figures like him in the memory of the Chinese and Malay literary community, such as Su Shi and Masuri S. N., who continue to influence and inspire writers and poets of this age. In discussing these figures, speakers from these different literary backgrounds also shed light on the complex relationship between poetics, history, and culture.

This is a cross-language panel discussion in English co-presented by Poetry Festival Singapore. It includes a live Q&A towards the end of the session.

நிகழ்வைப் பற்றி

பாரதியார் எனும் சின்னசுவாமி சுப்பிரமணிய பாரதி (1882 - 1921) பலராலும் நவீன தமிழ்க் கவிதையின் தந்தையாக அழைக்கப்படுவது உண்டு. பாரதி மறைந்து ஒரு நூற்றாண்டு ஆகியிருந்தாலும், அவரது சகாப்தம் முற்றுப் பெறாதது. பாரதியை மையமாகக் கொண்டுள்ள இந்த அமர்வு, சீன, மலாய் மொழிகளில் அவரைப் போன்ற ஆளுமைகளையும் பின்னோக்கிப் பார்க்கிறது. இன்றைய தமிழ், சீன, மலாய் மொழிக் கவிஞர்களும் எழுத்தாளர்களும் அன்றைய பாரதி, சூ ஷு (Su Shi), மசூரி எஸ். என். போன்ற கவிஞர்கள்மீது கொண்டுள்ள ஈர்ப்பும் அவர்களிடமிருந்து பெறும் ஊக்கமும் எவ்வாறானவை? இந்தப் பன்மொழி ஆளுமைகளைப் பற்றிக் கலந்துரையாடுவதுடன், கவித்துவம், வரலாறு, பண்பாடு போன்றவற்றையும் அலசிப் பார்க்கின்றனர் அமர்வின் பேச்சாளர்கள்.

சிங்கப்பூர்க் கவிதை திருவிழா அமைப்புடன் இணைந்து வழங்கப்படும் இந்த அமர்வு ஆங்கிலத்தில் நடைபெறும். நிகழ்வின் இறுதியில் ஒரு கேள்வி பதில் அங்கமும் நேரலையாக இடம்பெறும்.

Writers / Presenters

கீதா சுகுமாரன் Geetha Sukumaran

Geetha Sukumaran is a Tamil poet and a bilingual translator in Tamil and English. Her first collection of poems Otrai pakadaiyil enchum nampikkai, was published in 2014. Her English translation of Ahilan's poetry Then There Were No Witnesses was published by Mawenzi House, Toronto (2018). Her recent book Tea: A Concoction of Dissonance (Dhauli Books 2021), is a collaboration with the poet Ahilan and artist Vaidheki. She is the recipient of the SPARROW R Thyagarajan award for her poetry. She is a doctoral student in the Humanities program at York University and is the founder of Conflict and Food Studies. 

கீதா சுகுமாரன் கனடாவில் முனைவர் பட்டத்திற்கான மேற்படிப்பில் ஈடுபட்டுள்ளார். ஆங்கிலம், தமிழ் ஆகிய இருமொழிகளில் கவிதைகளை மொழிபெயர்க்கும் அவரது

ஒற்றைப் பகடையில் எஞ்சும் நம்பிக்கை எனும் முதல் கவிதைத் தொகுப்பு 2014இல் காலச்சுவடு பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது. பா. அகிலனின் தேர்ந்தெடுக்கப்பட்ட கவிதைகளின் ஆங்கில மொழிபெயர்ப்பான 'Then There Were No Witnesses ’ எனும் நூல் மவென்ஸி பதிப்பகத்தால் 2018இல் கனடாவில் வெளியிடப்பட்டது. 2021இல் ஓவியை வைதேகியுடனும் பா. அகிலனுடனும் இணைந்து தேநீர்: முரண்களின் கலவை எனும் நூலினை வெளியிட்டுள்ளார்.

 
 

Moderator

சுப்பு அடைக்கலவன் ஒரு பொறியாளராக பணிபுரிகிறார். அறிவியலையும் தொழில்நுட்பத்தையும் தாண்டி, தமிழ் மீது இவருக்கு அதீத பற்று உண்டு. பல்வேறு தமிழ் நாடகங்களில் சுப்பு நடிகராக, கதாசிரியராக, இயக்குனராகவும் இருந்திருக்கிறார். சுப்பு பல்வேறு தமிழ் அமைப்புகளில் உறுப்பினராகவும் இருக்கிறார். அவரைப் போன்று, பல இளைஞர்களுக்கு தமிழ் ஆர்வத்தையும் பற்றையும் வளர்க்கவேண்டும் என்பது அவரது வாழ்நாள் இலக்காக உள்ளது.

Subbu Adaikalavan is an Automation and Development Engineer by profession. Apart from technology and science, he is keen and passionate about Tamil language and culture. He has acted, directed, and written various stage plays in Tamil. He also serves as a committee member in various Tamil organisations. Subbu aspires to inspire many youths to learn and promote the Tamil language in a fun and engaging manner to ensure the sustainability of the language.

 
close