Home / SWF 2021 Programmes
/Switch language: TamilEnglish

உண்மை பாதி கற்பனை பாதி: கட்டுரையும் புனைகதையும்
(True Story? Or Storied Truth? - Feature vs Fiction Writing)

Conversations  |  General  |  தமிழ்  |  1 hr

7 Nov Sun, 10am - 11am
Festival Pass  - $16 (Early Bird) | $20 (Regular)
location SISTIC Live
favourite favourite Add To Favourites
Event has ended

About

It's a face-off between two journalists and two writers. Examine how a news story is enhanced with creative elements and narrative writing, and how fiction is made more interesting by taking inspiration from news stories and including facts.

This pre-recorded Tamil programme is co-presented with Tamil Murasu.

நிகழ்வைப் பற்றி

உண்மைகளால் நெய்யப்பட்ட கதையா? அல்லது கதைகளின் கோர்வையால் ஆன கட்டுரையா? கட்டுரைகள் எவ்வாறு புனைவு அம்சங்களைக் கொண்டு மெருகூட்டப்படுகின்றன, புனைவெழுத்திற்கு எவ்வாறு உண்மைகள் ஊக்கமளிக்கின்றன என்பதை இந்தச் செய்தியாளர்களுடனும்எ ழுத்தாளர்களுடனும் இணைந்து ஆராயுங்கள்.

முன் ஒளிப்பதிவு செய்யப்பட்ட இந்தத் தமிழ் அமர்வு, தமிழ் முரசுடன் இணைந்து வழங்கப்படுகிறது.

Writers / Presenters

 
ருஷ்யேந்திரன் குமரேசன் Rushyendran Kumaresan

ஏறக்குறைய 40 ஆண்டுகளாக தமிழ் முரசில் பணியாற்றும் ருஷ்யேந்திரன், செய்திக்கட்டுரை எழுதுவதில் கைதேர்ந்தவர். உள்ளூர், தமிழக அரசியல் கட்டுரைகள் பலவற்றை எழுதியுள்ளார். முக்கிய நடப்புக்களுக்கான சிறப்புக் கட்டுரைகள் எழுதுவதில் இவர் முதன்மையானவர். இவரது கைவண்ணம் புதின இலக்கியத்திலும் வெளிப்பட்டுள்ளது. 'சோழபுரம் சிவகலை' என்ற இவரது தொடர்கதை, 2005ஆம் ஆண்டு முதல் 2007ஆம் ஆண்டு வரை ஞாயிறுதோறும் தமிழ் முரசில் வெளிவந்தது. தமிழ் மூத்த துணையாசிரியரான ருஷ்யேந்திரன், அறவியலில் இளநிலைப் பட்டமும் ஆங்கில இலக்கியத்தில் முதுநிலைப் பட்டமும் பெற்றவர்.

A Tamil Murasu veteran with over 40 years of experience, Rushyendran’s insightful special news features on happenings in Singapore and Tamil Nadu, as well as international affairs, have been a treat for readers. Rushyendran has also written fiction. His serialised novel, Chozhapuram Sivakalai, was published in Tamil Murasu every Sunday from 2005 – 2007, and gathered a huge fan base. A Senior Sub-editor at Tamil Murasu, Rushyendran holds a bachelor's degree in Science and a master's degree in English Literature.

 
 
அழகுநிலா Azhagunila

அழகுநிலா (புனைவு, அ-புனைவு, குழந்தை நூல்கள்): குழந்தைகளுக்காக கொண்டாம்மா கெண்டாமா, மெலிஸாவும் மெலயனும், மெலிஸாவும் ஜப்பானிய மூதாட்டியும், பா அங் பாவ் ஆகிய நான்கு படப் புத்தகங்களை எழுதியுள்ளார். ஆறஞ்சு, சிறுகாட்டுச் சுனை, சங் கன்ச்சில் ஆகியவை இவரது பிற நூல்கள் ஆகும். சிறுகாட்டுச் சுனை நூல் ‘சிங்கப்பூர் இலக்கிய விருது 2020’க்கு தகுதிச் சுற்றில் தேர்வானது. சிங்கப்பூர் புத்தக மன்றத்தின் Beyond Words 2015 திட்டத்தில் தேர்வானவர். பொறியியலில் முதுகலைப் பட்டம் பெற்றவர்.

Azhagunila (fiction, non-fiction and children’s writer) is the author of four picture books for children: Kondama Kendama, Melissavum Merlionum, Melissavum Japaniya Moothatiyum, and Pa Ang Bao. Kondama Kendama won the Beyond Words 2015 competition by Singapore Book Council. Her other works include Oranju, Sang Kanci, and Sirukattu Chunai which was shortlisted for the Singapore Literature Prize 2020. She holds a master's degree in Engineering.

Moderator

கவிதா கரும்பாயிரத்தின் மொழிபெயர்ப்புகள், சிங்கப்பூர் எழுத்தாளர் லதாவின் The Goddess in the Living Room (2014) சிறுகதைத் தொகுப்பு, மலேசிய தமிழ்ச் சிறுகதைகளின் மொழிபெயர்ப்பான Children of Darkness (2016) ஆகியவற்றில் இடம்பெற்றுள்ளன. அவர் நகர்மனம் (2017) எனும் படைப்பிலக்கியத் தொகுப்பின் இணையாசிரியரும் ஆவார். ஊடகம், கல்வி, கலை நிர்வாகம் ஆகிய துறைகளில் அவர் இருபது ஆண்டுகளுக்கு மேலாகப் பணிபுரிந்துள்ளார்.

Kavi K translates literary fiction from Tamil to English. Her translations have been featured in short story collections such as The Goddess in the Living Room (Epigram Books 2014) by Latha and the Malaysian anthology Children of Darkness (Vallinam Publications, 2016). She co-edited Nagarmanam, (Marshall Cavendish Asia, 2017) the Tamil edition of the Commuting Reader series, commissioned as part of #BuySinglit2017. She has worked in the media, education, and arts administrative sectors over the past 20 years.

 
close