இந்திரஜித் Indrajit

Singapore

Indrajit writes novels and poems. He has two poetry collections, two short-story collections and a collection of essays to his name. His works have also been featured in Tumasik: Contemporary Writing from Singapore.

பதினேழு வயது முதல், கவிதை, சிறுகதை எழுதி வருபவர் இந்திரஜித். எண்பதுகளின் இறுதியில் ஆசிரியர் வை. திருநாவுக்கரசுடன் தமிழ் முரசில் பணியாற்றியவர். அவர் அங்குப் பணியாற்றிய சமயத்தில்தான் ராஜசேகர், ரெ. பாண்டியன் போன்ற இளம் கவிஞர்களின் படைப்புகள் முரசில் வெளிவரத் தொடங்கின. முரசு முதல்முறையாகப் புதுக்கவிதைக்கு இடம் தந்த சமயமும் அதுவே. இந்திரஜித் இதுவரை ஐந்து நூல்கள் எழுதியிருக்கிறார். ‘ரயில்’ என்ற தலைப்பில் இவரது நாவலும், ‘இந்திரஜித் கவிதைகள்’ என்ற நூலும் விரைவில் வெளிவரவிருக்கின்றன.