பற்றி
அசைவுகளையும் திசைகளையும் பற்றிய கதைகள், பாடல்கள், விளையாட்டுகள் நிறைந்த இந்த நிகழ்வில், கதைசொல்லி அபி க்ரிஷுடன் இணைந்திடுங்கள். இதில் தண்ணீருக்குள் நீந்தும் தவளையாகவும் மரங்களின் மேலே தாவும் ஆடாகவும் நீங்கள் உருமாறலாம். வீட்டுக்குச் செல்லும் பல வழிகளைப் பாடலில் கண்டுபிடிக்கலாம். சிக்கல் சுந்தரியின் தோழன் வசிக்கும் அடுக்குமாடிக் கட்டடத்தில் சுவாரசியமான அண்டைவீட்டுக்காரர்கள் உள்ளனராம். தோழனின் வீட்டைக் கண்டுபிடிக்க நீங்கள் சிக்கல் சுந்தரிக்கு உதவியும் செய்யலாம்.
This session is in Tamil. Recommended for ages 4 - 6.
Visit go.gov.sg/swfplaygroundmaterials to download the Knock-Knock game.
தொகுப்பாளர் பற்றி
அபி வளர்ந்து வரும் சிங்கப்பூர் சிறுவர் நூல் எழுத்தாளர். தமிழ் மொழி, இலக்கியக் கூறுகளை அடிப்படையாகக் கொண்ட தற்கால இருமொழி நூல்களை அவர் எழுதிவருகிறார்.